வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ம ம க ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ம ம க ஆர்ப்பாட்டம்
X
தக்கலை
மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று  நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜிஷ்தி முகமது தலைமை வகித்தார். நிர்வாகிகள் நவாஸ்கான், அக்பர், அலி அக்பர், முகமது பயாஸ், ஹைக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட துணை தலைவர் உவைஸ் தொடக்க உரையாற்றினர்.  கட்சி தலைமை பிரதிநிதி ஏர்வாடி ரிஸ்வான், விடுதலை சிறுத்தைகள் மத்திய மாவட்ட செயலாளர் மேசியா, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில பேச்சாளர் அப்துல் ஹமீது உரையாற்றினர். பத்மநாபபுரம் எம் எல் ஏ  மனோ தங்கராஜ் சிறப்புரை ஆற்றினார்.
Next Story