சங்கரன்கோவில் அருகே சாயமலை மலையை எம்எல்ஏ ஆய்வு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாயமலை மலைய சுற்றியுள்ள கிராம பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ அவர்கள் சாயமலை மலையில் ஆய்வு மேற்கொண்டார். இம்மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னங்கள் மற்றும் மலை கோவில்கள் இருப்பதாலும் சுற்றியுள்ள கிராம பொது மக்களின் குலதெய்வமாக வழிபடுவதன் காரணத்தினாலும் இம்மலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனிம வளங்கள் எடுக்க உள்ளதாக பரவும் பொய்யான செய்திக்கு பொதுமக்களிடம் விளக்கம் அளித்தும் பொது மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்த ஆய்வின் போது ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர்.
Next Story

