எதிர்வரும் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் புனரமைக்கும் பணிகள் தீவிரம்...

எதிர்வரும் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் புனரமைக்கும் பணிகள் தீவிரம்...
X
எதிர்வரும் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் புனரமைக்கும் பணிகள் தீவிரம்...
எதிர்வரும் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் புனரமைக்கும் பணிகள் தீவிரம்... நீலகிரி மாவட்டம்  உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது இங்கு கோடை சீசனுக்கு மலர்கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம் இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவில் அனைத்திடங்களிலும் உள்ள மலர்களையும் இயற்கை காட்சிகளையும் மரங்களையும் புல்வெளிகளையும் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையை போலவே அருகாமையில் பெரணி இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் முன்னர் பல்வேறு செடிகள் மற்றும் மலர்கள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சில காலங்களாக பராமரிப்பின்றி புனரமைப்பிற்காக கிடப்பில் போடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெரணி இல்லத்தை மீண்டும் புணரமைத்து சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்காக தயார் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சிறப்பு கவனம் செலுத்தி பெரணி இல்லத்தை புணரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வருடா வருடம் மலர் கண்காட்சி காலங்களில் வெளிப்பகுதியில் உள்ள புல்வெளிகளில் பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்படும். அவ்வாறு வருகை புரிபவர்களுக்கு இந்த பெரணி இல்லமும் காட்சிக்கு தயாராவது கூடுதல் மகிழ்ச்சியை  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் .
Next Story