சேலத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

X
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வேம்படிதாளம் பள்ளி அருகே சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த முனியப்பன் மகன் அருண்குமார் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போன்று வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் அங்கு உள்ள ஒரு பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக உடையாப்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (20) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

