சேலம் கொண்டலாம்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலம் ஊத்துக்குளி காட்டை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி மதுமிதா (வயது 27). குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மனம் உடைந்து காணப்பட்ட மதுமிதா வீட்டில் உள்ள விட்டத்தில் கம்பியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுமிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட மதுமிதாவுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் வருவாய் கோட்டாட்சியரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story