அரசு பள்ளியில் மோதல் மாணவர் காயம்

X
குமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சரல் விளை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 11ஆம் வகுப்பு பொது தேர்வுக்காக ஹால் டிக்கெட் வாங்குவதற்காக அந்த மாணவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் படிக்கும் கோழிப்போர் விளை பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவர் அங்கு வந்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இருவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென சரல் விளை மாணவரை சக மாணவர்கள் கையால் தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆசிரியர்கள் மாணவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலி சூப்பரண்டு பார்த்திபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டரணி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளி சென்று விசாரணை நடத்தினர்.
Next Story

