தாளவாடி அருகே வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?

X
தாளவாடி அருகே வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா? ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் நெய்தாளபுரம் முதல் முதியனூர் வரையுள்ள வனப்பகுதியில், சாலையின் இருபுறமும் புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் வனவிலங்குகள் எவ்விடத்தில் நின்றுள்ளது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தினந்தோறும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர், எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியவும், மனித உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் உடனடியாக சாலையின் இரு புறமும் உள்ள புதர்களை வெட்டி சரி செய்து தர வேண்டும் என்பது அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

