திண்டுக்கல் மாவட்டம், திருஞானமலை ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் அகிலாண்ட ஈஸ்வரி சித்தர் ஞான திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரி விழா!

திண்டுக்கல் மாவட்டம், திருஞானமலை ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் அகிலாண்ட ஈஸ்வரி சித்தர் ஞான திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதிலிங்கேஸ்வரர் பிரதிஸ்டை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம்,திருஞானமலை ஸ்ரீ ஆதிலில்கேஸ்வரர் அகிலாண்ட ஈஸ்வரி சித்தர் ஞான திருக்கோவில் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதிலிங்கேஸ்வரர் பிரதிஸ்டை நடைபெற்றது.திருஞானமலை ஆனந்த திருக்கோவில்,ஆனந்த சச்சிதானந்தம் சுவாமி தலைமையில் திருப்பூர் ஶ்ரீமகாலட்சுமி சுவாமிகள்,கோயமுத்தூர் சிவபுரம் ஶ்ரீ மூர்த்தி லிங்கம் பிரான் சுவாமிகள்,ஆன்மீக நெறியாளர் டாக்டர் ஜெய்லானி,பிரபல தொழிலதிபர் மாதவராஜ்,தீரன் சின்னமலை கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஏ.குமார்,ஆன்மீக நெறியாளர் பொள்ளாச்சி பிரபு,திண்டுக்கல் சொர்ணம் ஹோண்டா முருகேசன்,பழநி சிவா,சிற்பக்கூடம் ஆலய சிற்பி கே.சிவநேசன்,திண்டுக்கல் ஸ்தபதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.சிவலிங்கம் பிரதிஸ்டை முதற்கொண்டு அகிலாண்டேஸ்வரி,நந்தீஸவரர்,கொடிமரம்,பலிபீடம்,ஐம்பூத கணபதி,அகார்ஷண காளி கணபதி,முருகன்,பைரவர்,நவகிரகங்கள்,சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர்,துர்க்கை அம்மன்,தட்சணாமூர்த்தி,லிங்கோத்பவர்,நாகம்மாள்,கன்னிமார்கள்,சப்தகன்னியர்கள் ஆகியோர்களுக்கும் பிரதிஸ்டை செய்யப்பட்டது.இவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.இயற்கை எழில் மிக்க பூஞ்சோலை போன்று கோவில் இருந்ததால் அனைவரும் பாராட்டினர்.
Next Story