காஷ்மீரிலிருந்து அதிவேக பேட்டரி கார் குமரி வருகை

X
பேட்டரி மூலம் ஒடும் காரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேகமாக ஓட்டி சாதனை படைக்க டாடா கர்வி சார்பில் பிப்ரவரி 24, 2025 அன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து தொடங்கி பிப்ரவரி 28, 2025 அன்று உறுதிசெய்யப்பட்டபடி தமிழ்நாடு கன்னியாகுமரியில் முடிவடைந்தது. இன்று குமரிக்கு கார் ஓட்டி வருகை தந்த குழுவினர்களை மலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். கார் ஓட்டி சாதனை படைத்து வருகை தந்த குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு தெரிவித்தார் விஜய் வசந்த் எம். பி. இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை கொடுத்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் இந்த சாதனையை கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், அமைப்பாளர் சிரிஷ் சந்திரன், நடுவர் மோஹித் வாட்ஷ், விவேக் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

