வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
X
மீனவர் மீது வழக்கு
குமரி மாவட்டம் மணக்குடி பகுதி சேர்ந்தவர் சேகர் (47). மீனவர். நேற்று இவர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வி (40) என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து உள்ளார். அப்போது ஆரோக்கிய செல்வியிடம் அத்துமீறி, அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.         அப்போது ஆரோக்கிய செல்வியின் குழந்தைகள் அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குவிந்துள்ளனர். இதை அடுத்து ஆரோக்கிய செல்விக்கு கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை  அடித்து உதைத்து சேதப்படுத்தி, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும்  வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆரோக்கிய செல்வி தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story