அரசு பள்ளி வெள்ளி விழா ஆண்டு கோலாகலம்

அரசு பள்ளி வெள்ளி விழா ஆண்டு கோலாகலம்
X
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில்  25வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி    25வது ஆண்டு விழா தலைமையாசிரியை நாகரத்தினம் தலைமையில்  நடந்தது. பி.டி.ஏ. தலைவர் குமரேசன், நிர்வாகிகள் பாலு, முருகன்,சண்முகம், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரிய, ஆசிரியைகளுக்கு, சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story