கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை
X
குமாரபாளையத்தில் கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வாசுகி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரபாகரன், 51. இவர் பிப். 19ல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த, இவரது மனைவி சுதா, 46, வீட்டில் இருந்த எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இவரை பிப். 22ல் கோவை தனியார் மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக பிப். 27ல் கோவை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை 06:30 மணியளவில் இறந்தார். இது இது குறித்து இவரது மகன் தனுஸ்கரன், 24, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story