தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் ஆராய்ச்சி சிறப்பு விருதுகள் வழங்கும் விழா
, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் ஆராய்ச்சி சிறப்பு விருதுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எஸ். கிருபா மெக்கானிக்கல் ஆர்க்கிடெக்ட், பி டி சி கார்ட், பிலிப்ஸ் ஹெல்த்கேர், பெங்களூரு, கர்நாடகா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாண்பமை வேந்தர் அவர்கள் தமது தலைமை உரையில் பேசியதாவது: “இன்று நாம் தேசிய அறிவியல் தினம் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாடுவதற்குக் காரணம், நம் நாட்டின் பெருமைமிகு விஞ்ஞானி, பாரத ரத்னா, நோபல் பரிசு பெற்ற டாக்டர். சி.வி. ராமன் அவர்கள், 1928-ம் ஆண்டு கண்டுபிடித்த ராமன் விளைவு (ராமன் எபெக்ட்) ஆகும். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு உலக விஞ்ஞானத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவியல் என்பது மக்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக வளர்ந்து வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் கைபேசி, கணினி, மருத்துவ சாதனங்கள், மின்சார சாதனங்கள், செயற்கைக் கோள்கள், ரோபோடிக்ஸ், நுண்ணணு தொழில்நுட்பம், 5ஜி தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் அறிவியல் வளர்ச்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. நாம் இன்று அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். இந்தியா 2047- க்குள் உலக அளவில் விஞ்ஞானத் துறையில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அதற்காக, நவீன கண்டுபிடிப்புகளை கற்றறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி, தானியங்கி அமைப்புகள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.. விஞ்ஞான வளர்ச்சியில் நமது பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்! சர்வதேச அளவில் இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னோடியாக்கும் உயரிய இலக்கில் நாம் அனைவரும் ஒன்றாக செயல்படுவோம்” என்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிருபா, மெக்கானிக்கல் ஆர்க்கிடெக்ட், பி டி சி கார்ட், பிலிப்ஸ் ஹெல்த்கேர், பெங்களூரு, கர்நாடகா பேசியதாவது “இந்த உலகில் சாதித்த மனிதர்கள் அனைவரும் சாதாரண மாணவர்களே, ஆகவே இன்றைய தொழில்நுட்ப உலகில் மதிப்பெண்களை விட புதுமையான சிந்தனை, படைப்பாற்றல் திறங்களே மிகவும் முக்கிய திறன்களாகும். இந்திய மாணவர்கள் உலக இளைங்கர்களுடன் போட்டி போடும் திறன்கள் அனைத்தும் உள்ளது. எதிர்கால உலகம் உங்களை போன்ற மாணவர்கள் கையில் தான் உள்ளது என்றார்” இவ்விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மேற்கொள்ளும் முக்கியமான ஆய்வுகள் குறித்த சுவரொட்டிகள் (போஸ்டர் ப்ரெசெண்டேஷன்) விளக்கமாகக் காட்சிபடுத்தப்பட்டன. ஆய்வின் நோக்கங்கள், முறைசார்ந்த அணுகுமுறை, மற்றும் கண்டுபிடிப்புகள் தெளிவாக முன்வைக்கப்பட்டன. மேலும், ப்ராஜெக்ட் எக்ஸ்போ , ஐடியா ஹேக்கதான், வினாடி வினா நிகழ்ச்சி போன்ற போட்டிகள் மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை ஊக்குவிக்க நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஸ்கோப்பஸ் மற்றும் எஸ்சிஐஇ, இன்டெக்ஸ்டு ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்ட, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, வேந்தர் அவர்கள் பாராட்டு தெரிவித்துத் விருதுகள் மற்றும் பணப்பரிசு வழங்கினார். இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி முனைவர் நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சண்முக சுந்தரம், தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் புலமுதல்வர் முனைவர் சேகர், கூடுதல் புலமுதல்வர் முனைவர் வேல்முருகன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் புலமுதல்வர் (அகடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ) முனைவர் முனைவர் சண்முக சுந்தரம் , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் செல்லப்பன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அன்பு, ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கார்த்திகா, பேராசிரியர் கோவிந்தசாமி, முனைவர் பரமேஸ்வரி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story




