அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இன்று 28-02-2025 காலை 10.00 மணியளவில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர் செ. சுப்பிரமணியன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் & பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரை ஆற்றினார். உதவித் தலைமை ஆசிரியர் செல்வராணி அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் சின்னசாமி, சிலம்பரசி, PTA தலைவர் நீலமுருகன், வாழ்த்துரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் பாலசந்திரன் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இந்திராணி முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்வில் இலக்கிய போட்டிகள் ( பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி) அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் & பரிசு வழங்கப்பட்டது. நூறு திருக்குறள் ஒப்பித்த ஒன்பதாம் வகுப்பு மாணவி வனஜா சான்றிதழ் & பரிசு வழங்கப்பட்டது. மார்ச்சு 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு கேடயம் & சான்றிதழ் வழங்கப்பட்டது. 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகம், ஊமை நாடகம், பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன . நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
Next Story







