வக்கீல்கள் உண்ணாவிரதம் ஏராளமானவர்கள் பங்கேற்பு

X
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட வரைவு மசோதாவை திரும்ப பெற வேண்டும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வழக்கறிஞர்களைளே இந்தியாவில் எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேம நல நிதியினை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களில் கூட்டுக் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி நேற்று வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, பத்மநாபபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் நீதிமன்ற கட்டிடத்தின் அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கியது. வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

