அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்த நோயாளி மாயம்

X
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (57). விவசாயியான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 17ஆம் தேதி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவரது மனைவி செல்வி (43) என்பவர் மருத்துவமனையில் உடன் இருந்து வந்தார். நேற்று மதியம் சாப்பாடு எடுப்பதற்காக செல்வி வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது சிகிட்ச்சை வார்டில் இருந்த மணிகண்டனை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து செல்வி ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் என் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

