பண்ருட்டி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பணம் ஒப்படைப்பு

பண்ருட்டி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பணம் ஒப்படைப்பு
X
பண்ருட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகி பண்ருட்டி திருவதிகை வெங்கட் என்கிற ரவிக்குமார் இறப்புக்கு திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி பேசி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் இறந்து போன வெங்கட் குடும்பத்திற்கு பெற்றுத் தந்தனர்.  இதில் 5 லட்சம் ரூபாய் வெங்கட் மனைவி முத்தமிழ் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் ஈமச்சடங்குக்காக ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்த பத்திரத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் முன்னாள் நகர செயலாளர் செந்தில் பண்ருட்டி நகர செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story