வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் தேசிய அறிவியல் தினம்

X
தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் , பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் மூலம், தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தையும், நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசிரியர் செல்லதுரை வரவேற்றார். மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேர்வு எழுதத்தேவையான கருவிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

