திருவோணம் அருகே தீ விபத்தில் வீடிழந்தவருக்கு எம்எல்ஏ உதவி

நிவாரண உதவி
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியம், பாதிரங்கோட்டை தெற்கு ஊராட்சி, அனந்தகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசி, இவரது கணவர் ரமேஷ். இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் இவர்களது ஓட்டு வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது, திருவோணம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெண்மணி ராமு, கிளைச் செயலாளர் சத்யமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்பாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story