போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு
போதைப்பொருளுக்குஅடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து,மனதளவிலும் உடலளவிலும் மிகுந்தபாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் நிலைக்குதள்ளப்படுவார்கள். எனவேபோதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி மாணவர்கள் வைத்து போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 28.02.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பாலமுருகன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வினோத்கண்ணன், மற்றும் காவலர்கள், பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் மற்றும் இசைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைபொருள் மற்றும் கள்ளச்சாராயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவர்களிடம் பேசிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சிலர் தவறான வழியில் செல்கின்றனர். அவர்கள் அத்தகைய பழக்கத்திலிருந்து வெளிவந்து உடல் நலத்தை பேணிக்காத்து நன்முறையில் வாழ வேண்டும் என்பது அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாது அனைவரின் விருப்பமாக உள்ளது. மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கள்ளச்சாராயம்,கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story




