தோகைமலையில் உள்ள பேக்கரியில் தரமற்ற பொருட்கள்

பிறந்தநாள் கேக் துர்நாற்றம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
கரூர் மாவட்டம், குளித்தலை மணப்பாறை மெயின் ரோடு தோகைமலையில் பல்லவன் வங்கி அருகே பிரபல தனியார் பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி கடையில் காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற கேக், ஸ்வீட், கார வகைகள் விற்பனை செய்து வந்துள்ளனர், இதேபோல் கடந்த வாரம் தோகைமலை பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்டோர் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக் பெற்றுள்ளனர். இந்த கேக்கில் துர்நாற்றம் மற்றும் புழுக்கள் உள்ளதை அறிந்த சிலர் மதி பேக்கரி கடைக்கு சென்று விளக்கத்தை கேட்டுள்ளார். இதில் அந்த கடை உரிமையாளர் சரியான பதில் கூறாததால் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர், அதன் தோகைமலை வட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமமூர்த்தி , தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் காலாவதியான தின்பண்டங்கள், காலாவதியான கேக் மற்றும் ஸ்வீட் கார வகைகள் இருந்ததை கண்டுள்ளனர். தரமற்ற ஸ்வீட் கேக்குகள் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அதிகாரிகளிடம் லஞ்சம் பணம் அளித்ததாகவும் கூறப்படுகிறது
Next Story