வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த கணவன் மனைவி

X
குமரி மாவட்டம் கருங்கல் அருகே திப்பிரமலை பமகுதியை சேர்ந்தவர் ஜெகன் (42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனுஷா (35). இவர்களுக்கு ஆறாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வீட்டுக்கு ஜெகன் வந்துள்ளார். சிறிது நேரத்தில் கழுத்து அறுப்பட்டு ஆபத்தான நிலையில் அனுஷா சத்தம் போட்டவாறு வீட்டில் வெளியே வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவர் பேச முடியாமல் கீழே விழுந்துள்ளார். உடனடியாக வீட்டுக் கதவை பார்த்தபோது வீட்டுக் கதவு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே உடைத்து சென்று பார்த்தபோது அங்கு வீட்டு மாடியறையில் இரண்டு கைகளும், கழுத்தும் அறுபட்ட நிலையில் ஜெகன் மயங்கி கிடந்தார். அவருக்கும் பேச முடியவில்லை. இது தொடர்பாக உடனடியாக கருங்கல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டனர். வீட்டில் கணவன் மனைவியை தவிர வேறு யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. இரண்டு பேரும் சுயமாக கழுத்தை அறுத்துக் கொண்டார்களா? வேறு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இரண்டு பேரும் பேச துவங்கினால் தான் சம்பவம் தெரிய வரும் என தெரிகிறது. கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

