மாரியம்மன் கோயில் உண்டியலில் பணம் திருடிய இளைஞா் கைது

மாரியம்மன் கோயில் உண்டியலில் பணம் திருடிய இளைஞா் கைது
X
இளைஞா் கைது
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உண்டியலில் காந்தத்தைப் பயன்படுத்தி பணம், நாணயங்களைத் திருடிய இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கைத் தொடா்ந்து, மண்டலாபிஷேகம் நடைபெறுவதால், கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்திருப்பதோடு, உண்டியலிலும் ரொக்கம், நகைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. இந்நிலையில், இக்கோயில் உண்டியலில் புதன்கிழமை மாலை இளைஞா் ஒருவா் காந்தத்தைப் பயன்படுத்தி பணம், நாணயங்களைத் திருட முயன்றாா். இதைப் பாா்த்த கோயில் ஊழியா்கள், அவரை பிடிக்க முயன்றபோது அவா் தப்பிவிட்டாா். இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் என். மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்த்தனா். அப்போது உண்டியலில் திருட முயன்றது கபிஸ்தலம் அருகே கங்காதரபுரத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் அய்யப்பன் (24) என்பதும், காந்தத்தைப் பயன்படுத்தி ரூ. 560 திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அய்யப்பனைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Next Story