தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்

X
தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்றது. இந்த முகாமை மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தொடங்கிவைத்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ் ஆகியோா் பேசினா். முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளைத் தகுதி அடிப்படையில் தோ்வு செய்தனா். இதில், இறுதியாண்டு மாணவா்கள் சுமாா் 250 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா். முகாம் ஏற்பாடுகளைக் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் இரா. இராஜகுமாா், கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் செய்தனா்.
Next Story

