சென்னையில் முன்னாள் பிஎஸ்எப் வீரர் தாக்குதல் முப்படை தலைமையகத்திற்கு புகார் 

சென்னையில் முன்னாள் பிஎஸ்எப் வீரர் தாக்குதல் முப்படை தலைமையகத்திற்கு புகார் 
X
முன்னாள் வீரர்கள் பேட்டி
அகில இந்திய பிஎஸ்எப் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கர் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-        குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் அமல்ராஜ் சென்னையில் ஒரு முக்கிய நபர் வீட்டில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் வீட்டு உரிமையாளர் மீது ஒரு வழக்கு சம்பந்தமாக சம்மனுக்காக சென்னை நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் இரண்டு சாதாரண உடை அணிந்த நபருடன் சென்று ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று பார்க்காமல் அமல்ராஜ் வலுக்கட்டாயமாக இழுத்து சட்டையை கிழித்து கைது செய்துள்ளனர்.        இந்த செயலையும்,  அநாகரிகமாக  நடந்து கொண்ட ஆய்வாளர் பிரவீன் ராஜேஷையும்  வன்மையாக கண்டிக்கிறோம். வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வாறு கண்காணித்து முன்னாள் வீரர்களுக்கும், சாதாரண மக்களுக்கும்  நீதி கிடைக்க சென்னை நகர காவல் துறை ஆணையர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக தலைமைச் செயலாளராக கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.       டெல்லி எல்லை பாதுகாப்பு படை மற்றும் அனைத்து துணை ராணுவ படையுடன் முப்படை தலைமையகத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பவுள்ளோம். இவ்வாறு கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் சுந்தரேஸ்வரன், சத்திய தாஸ், வேலுதாஸ், ராஜா உடனிருந்தனர்.
Next Story