விவசாயிகளை மிரட்டும் தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விவசாயிகளை மிரட்டும் தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
X
கடனைத் திருப்பி செலுத்துக்கோரி விவசாயிகளை மிரட்டும் தனியார் வங்கி மீது நடவடிக்கை விசிக மாநில துணைச் செயலாளர் வலியுறுத்தல்
தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் விவசாய நிலங்களை அடமானமாக வைத்து கடன் வாங்கியுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளை குண்டர்களை அனுப்பி அடாவடியாக வசூல் செய்து வருகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி கடன் வசூலை சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலமாகவே வசூல் செய்யப்பட வேண்டும் எனவும், மீறும் வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை எல்லாம் மதிக்காமல் தனியார் வங்கியானது 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் காரில் வந்து வீட்டிலேயே அமர்ந்து கொண்டு விவசாயிகளை மன உளைச்சல் ஆக்குவது மட்டுமல்லாமல் தற்கொலைக்கும் தூண்டுகிறார்கள். கடனை வசூல் செய்வதற்கு வங்கி அறிவிப்பு, சட்ட அறிவிப்பு மற்றும் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குண்டர்களை அனுப்பி வசூல் செய்வது தாராபுரம் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மேற்கண்ட தனியார் வங்கியை முற்று இட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்
Next Story