வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் 6 பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த விவகாரம் ஆசிரியரை விடுவிக்ககோரி 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலைகிராமமான மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் 6 மாணவிகளிடம் கணினி தேர்வின் பொழுது, அதே பள்ளியில் 1 ஆண்டுகாலமாக தற்காலிக ஆங்கில ஆசிரியராக ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவிகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புகார் அளிக்கக்கூடிய (CHILD HELP LINE) "1098" என்ற எண்ணுக்கு புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மத்தேயு மற்றும் சாதனா ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை செய்ததில் மாணவிகள் எழுத்துப்பூர்வமான புகார் அளித்ததால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மத்தேயு சாதனா ஆகியோர் இதுகுறித்து, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்காலிக ஆங்கில ஆசிரியர் பிரபு மீது புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி ஆங்கில ஆசிரியர் பிரபுவை காவல்துறையினர் போக்சோ மற்றும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஆசிரியர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று, மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது ஆங்கில ஆசிரியர் எந்த தவறு செய்யவில்லையெனவும் அவரை உடனடியாக விடுவிக்கோரி பள்ளி மாணவர்கள் ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் சாலையில் அமர்ந்து பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், வாணியம்பாடி வட்டாச்சியர் உமாரம்யா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கோட்டி தலைமையிலான அதிகாரிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதையடுத்து, சாலைமறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர், இதனால் ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் மலைசாலையில் சுமார் 2 மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
Next Story

