முதுமலையிலுள்ள மாயார் கிராமத்திற்கு செல்லக் கூடிய சாலையில் பட்டப்பகலில் கம்பீரமாக சாலையில் உலா வந்த புலி

X
முதுமலையிலுள்ள மாயார் கிராமத்திற்கு செல்லக் கூடிய சாலையில் பட்டப்பகலில் கம்பீரமாக சாலையில் உலா வந்த புலி. சாலையை கடந்து சென்ற புலியை கண்டு பரவசமடைந்த சுற்றுலா பயணிகள் திகைத்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அதிகமாக புலிகள் உள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையோரங்களில் புலிகள் அதிகமாக உலா வருகின்றன. இந்நிலையில் வனத்துறை சார்பில் முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வாகனங்களில் அனைத்து சென்று வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வனத்துறையினர் காண்பித்து வருகின்றனர். அப்போதெல்லாம் தென்படாத புலி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார், சிங்காரா, மசினகுடி உள்ளிட்ட சாலைகளில் செல்லும் போது தென்படுகிறது. குறிப்பாக மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று கம்பீரமாக சாலையை கடந்து மறுபுறம் சென்றது. முதன்முறையாக புலியைக் கண்ட சுற்றுலா பயணிகள் புலியை பார்த்ததும் ஆச்சரியமடைந்ததோடு குதூகலமாய் பரவசமடைந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

