அரசு பள்ளியின் இரு நூற்றாண்டு விழா விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

X
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அரசு உயர் நிலைப் பள்ளி 200 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டார். 200 வது ஆண்டு விழா அலங்கார நுழைவு வாயில் கல்வெட்டினை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா நேவிஸ் தலைமையில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன் வரவேற்புரையில் விழா நிகழ்ச்சிகளை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இருநூற்றாண்டு விழா மலரை வெளியிட விஜய்வசந்த் எம்பி வெளியிட கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பெற்றுக் கொண்டார். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் கவுரவிக்கபட்டனர். முன்னாள் மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். முன்னதாக சிறப்பு விருந்தினராக வருகை தந்த விஜய் வசந்த் எம்பி அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் டேனியல், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

