கோவை: கட்சி பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் !
மார்ச் ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் தாளியூர் பேரூராட்சியில், அனைத்து வார்டுகளிலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டது. அந்த பேனர் வைக்கும் கட்சி சார்ந்த பணியில், பேரூராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தூய்மை பணியாளர்கள் தங்களுடைய பணியை விடுத்து, திமுக கட்சி சார்ந்த பேனர்கள், கொடிக்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூய்மை பணியாளர்களின் வேலையை நிறுத்தி திமுக சார்ந்த கட்சி வேலைகளை செய்ய செயல் அதிகாரி உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது. தூய்மை பணியை விடுத்து கட்சி பணியை செய்ய வைத்த செயல் அலுவலர் மீது பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Next Story






