ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் இன்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில். இத்திரு கோவிலில் வருடம் தோறும் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் தீ மிதி எனப்படும் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் பூக்குழி விழா துவங்கியது. வர்ணசப்பரம், அர்ஜுனன் தபசு, தண்டியில் சேவை உள்ளிட்டவைகள் கடந்த 10 நாட்களாக தினசரி உற்சவங்களாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து 11 ஆம் திருநாள் ஆன இன்று பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக குருசேத்திர போர் முடிந்து திரெளபதிஅம்மன் சபதம் முடிக்கும் நிகழ்ச்சி காலையில் நடைபெற்றன. அதனை அடுத்து சப்பரத்தில் எழுந்தருளிய திரௌபதி அம்மன் நகரின் 4 ரதவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருக்கோவில் முன்புள்ள மைதானத்தில் பூ வளர்க்கப்பட்டு பூக்குழி நடத்தப்பட்டது.இந்த பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கை குழந்தைகளுடன் பக்தர்கள் பூ இறங்கியது பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
Next Story

