சேலம் சீலநாயக்கன்பட்டியில் சாலையில் சுற்றித்திரிந்த மான் மீட்பு

X
தற்போது கோடைகாலம் தொடங்கும் முன்னரே அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அந்த வகையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நேற்று மான் ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு கூட்டம் கூடினர். இதனால் மான் மிரண்டு போய் அங்கும் இங்கும் ஓடியது. தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் அதனை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
Next Story

