அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

X
Komarapalayam King 24x7 |1 March 2025 2:44 PM ISTகுமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக முதல்வர் ரேணுகா தலைமையில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எக்ஸெல் பொறியியல் கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் கருப்புசாமி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தேசிய அளவிலான விநாடி வினா நடத்தப்பட்டது. இயற்பியல் துறை மாணவ மாணவியர்கள் பல்வேறு படைப்புகளை உருவாக்கி பார்வைக்கு வைத்திருந்தனர். சோலார் பயன்பாடுகள், ஏ ஐ ரோபோட், தானியங்கி தெரு விளக்குகள், தானியங்கி தீயணைப்பான், டச் சென்சார், தானியங்கி தண்ணீர் விநியோகிப்பான், காந்த ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்தல், அல்டசானிக் லெவிட்டேஷன் உள்பட 50க்கும் மேற்பட்ட படைப்புகள் உருவாக்கி பார்வைக்கு வைத்திருந்தனர். முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் பார்வைட்டு அனைத்து படைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கி, வாழ்த்திப் பேசினார்கள். உதவிப் பேராசிரியர் கருப்புசாமி பேசுகையில், மாணவ, மாணவியர் இதுபோல கண்காட்சிகள், மாணவர்களிடம் பல அறிவியல் படைப்புகளை உருவாக்க வேண்டுமென்றும், மறைந்து கிடக்கின்ற திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென்றும், இதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளவையாக மாற்றவேண்டுமென்றும், இதற்கு தேவையான அரசுத் திட்டங்கள் மற்றும் உதவிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அனைத்து மாணவர்களும் இக்கண்காட்சியை கண்டு பயன்பெற்று மகிழ்ந்தனர். இயற்பியல் துறைத் தலைவர் அனுராதா இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story
