பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் இரத்த தானம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் இரத்த தானம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் மாவட்டம் பழையபேருந்து நிலையம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (பாடாலூர்) மற்றும் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி இணைந்து இன்று 01.03.2025 - ம் தேதி நடத்திய இரத்த தான முகாமில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மனித உயிர் விலைமதிப்பில்லாதது எனவும் இரத்த தானம் அளிப்பதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது என்றும் இரத்த தானம் அளிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பின்னர் இரத்த தானம் அளிப்பது உடலுக்கும் நன்மை தரும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து தனது குருதியை தானமாக அளித்தார்.
Next Story



