மக்கள் நீதி மய்யம் கோரிக்கை பலனாக சாலையோர முட்செடிகள், பாலத்தின் மீது விளைந்த மரங்கள் அகற்றம்
Komarapalayam King 24x7 |1 March 2025 2:55 PM ISTமக்கள் நீதி மய்யம் கோரிக்கை பலனாக சாலையோர முட்செடிகள், பாலத்தின் மீது பக்கவாட்டில் விளைந்த மரங்கள் அகற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு சர்வீஸ் சாலை பகுதியில் முட்புதர்கள் அதிகம் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. இதே போல் காவிரி பழைய பாலம் பக்கவாட்டில் பாலத்தின் உறுதித் தன்மையை சேதமாக்கும் வகையில், அஹ்திக அளவிலான மரங்கள் வளர்ந்திருந்தன. இவைகளை அகற்ற வேண்டி மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் கூறினார். உடனே, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நேரில் வந்து, முட்புதர்களையும், மரங்களையும் அகற்றினர்.
Next Story


