தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மும்மதத்தினர் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிலி, பேரூர் திமுக செயலாளர் மரிய.சார்லஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பக்தர்கள் தென்னங்கன்றுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
Next Story






