உடையார்பாளையத்தில் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை

உடையார்பாளையத்தில் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை
X
உடையார்பாளையத்தில் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.
அரியலூர் மார்ச்.2- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உடையார்பாளையம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2025 - 26 கல்வி ஆண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாத்தி பேரணியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாசரஸ்வதி அனைவரையும் வரவேற்றார். மாணவர் சேர்க்கை பேரணியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.குழுவினர் ஊராட்சி ஒன்றிய தொடக்ப்பள்ளியில் துவங்கி கடைவீதி, மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி வயது மாணவர்களை பள்ளியில் சேர்த்து கல்வியில் ஊக்கப்படுத்த வேண்டும் என குழந்தை குழந்தைகளின் பெற்றோர்களிடம் வலியுறுத்தப்பட்டது. அப்போது வீடு வீடாக சென்று பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் ஐந்து மாணவர்களை முதல் மற்றும் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். பேரணியில் இறுதியில் ஆசிரிய மைதிலி நன்றி கூறினார்.
Next Story