முதல்வர் பிறந்தநாள் விழாவில் குழந்தைகளுக்கு நல உதவி

X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் அஞ்சுகிராமம் செண்பகராமபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் நடந்தது. அஞ்சு கிராமம் பேரூராட்சி கவுன்சிலரும், மாவட்டபிரதிநிதியுமான சிவக்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை தலைவரும், அகஸ்தீஸ்வரம் திமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருமான காந்திராஜ் தலைமை தாங்கி, விளையாட்டு உபகரணங்கள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், மற்றும் பழங்கள், பாய்கள், இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் நிஜித், பேரூர் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவி ஜானகி கலந்து கொண்டனர். மேலும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story

