அரக்கோணத்தில் முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு அன்னதானம்!

முதல்வர் வேடம் அணிந்து அன்னதானம்
அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர திமுக அவை தலைவர் துரை சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் வேடமணிந்தவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை பார்த்த பொதுமக்கள் உண்மையிலேயே ஸ்டாலின் வந்து நல திட்ட உதவிகள் வழங்குகிறாரா என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாடக கலைஞர் என்பது பிறகே தெரிந்தது.
Next Story