இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விருதுநகர் மண்டலத்தில் உள்ள அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் காமராஜ் பொறியில் கல்லூரி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்த ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று உலகம் முழுவதும் இருக்க கூடிய மாறி வரும் பொருளாதரார சூழலில் ஸ்டார்ட் அப் என்று சொல்லக்கூடிய புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவது என்பது முன்னெப்போதையும் விட பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. மனித நாகரிக வளர்ச்சி குறித்தும், நெருப்பு சக்கரம் மின்சாரம் இணையம் இந்த நான்கு கண்டுபிடிப்புகள் தான் மனித குல வரலாற்றில் நாகரிகத்தின் போக்கை மாற்றியது. மனிதன் என்பவன் இந்த உலகத்தில் மிகச்சிறிய உயிரினம் தான். மனிதனை விட மிக வலிமையான உயிரினங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த உலகத்தில் உள்ள வளத்தில் மனிதன் மற்ற உயிரினங்களை விட ஏன் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அவன் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் மற்றும் மனிதனுக்கு இருக்கக்கூடிய பகுத்தறிவு சிந்தனைகள் தான். உலகத்தில் நீங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு மொத்த மனிதனுடைய தேவை என்பது ஒரு மாதிரி இருக்கும். அடுத்து வரக்கூடிய நூறு ஆண்டுகளில் மனிதனுடைய தேவை வேறு மாதிரி இருக்கும். வருகிற காலக்கட்டத்தில், பெரிய தொழில்நுட்பங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் அவ்வப்போது மாறி கொண்டே இருக்கிறது.எனவே உலகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுவத்தற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.இந்த மாற்றுத்திற்கு ஏற்ப தொழில்களும், வேலைவாய்ப்புகளும் மாறி கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு, நிதி வாய்ப்புகள், பயிற்சி இவற்றை ஏற்படுத்தி தருவதற்கு தான் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) இன்று உலகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதுதான் இந்த ஸ்டார்ட் அப். இன்று உலகத்தில் மக்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்ன அதனால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நேர இழப்பு, ஆற்றல் இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும் உழைப்பு விரயம் என்ன என்பதை ஆராய்ந்து இந்த மூன்றையும் சேமிக்கக்கூடிய திறன் பெற்ற ஒரு தொழில் முனைவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. விருதுநகர் மாவட்டம் என்பது தொழில் தொடங்குவதற்கான ஒரு முன்னோடியான மாவட்டமாக இருந்து வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் தொழில்கள் தொடங்கப்பட்டன. மூன்று தொழில்கள் பிரதானமாக இங்கு தொடங்கப்பட்டன. அவை இங்கு இருக்கக்கூடிய பட்டாசு, வர்த்தகம், மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதைத்தொடர்ந்து ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரீஸ், பேனாவின் உடைய நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் இதுபோன்ற தொழில்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன்னால் தான் தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இது போன்ற தொழில்கள் எந்த மாதிரியான தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு தொழில் நீடித்து நிலையாக வளர்வதற்கு என்னென்ன காரணிகள் உள்ளது என்பதை விருதுநகர் மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மையையும், தொகுப்புகளையும் நீங்கள் படித்தீர்களேயானால் உங்களுக்கு ஆச்சரியமான தகவல்கள் நிறைய கிடைக்கும். அப்பொழுது இதுபோன்ற தொழில்களை தொடங்குவதற்கு என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் இருந்தது, அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, அங்கு உள்ள தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, இங்கு உள்ள சூழலுக்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்தினார்கள் என்பது குறித்தும், அவர்கள் என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் எதிர்கொண்டார்கள் என்பதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒரு தொழிலை தொடங்கி அதை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவதற்கு என்னென்ன உத்திகளை கடைபிடித்தார்கள் அவற்றை எல்லாம் நீங்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். புதிதாக தொழில் தொடங்குவதற்கும், அரசின் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசினால் உருவாக்கப்பட்ட மாவட்ட தொழில் மையம் இயங்கி கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள் உருவாக்கி தருகிறது. தொழில்களை நாம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் பயிற்சிகளும் இருக்கிறது. என்னென்ன தொழில்கள் இருக்கிறது, என்னென்ன பயிற்சிகள் வழங்குகிறாார்கள், என்னென்ன மானியம் இருக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும்,மாறி வரும் காலகட்டத்திற்கு 100 வருடங்களுக்கு பின் எந்த தொழில் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றும், என்ன மாதிரியான படிப்புகள் படிப்பது, என்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும். விருதுநகர் மண்டலத்தில் உள்ள அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் அரசின் திட்டங்கள், வழங்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்;ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும்,Venture Nest மூலம், விருதுநகர் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வலுவான தொழில் வளாகமாக உருவாகிறது.இதன் மூலம், புதிய தொழில் வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, மற்றும் முன்னணி புதுமை வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். இந்த Venture Nest என்ற புத்தாக்க தொழில் முனைவு சூழல் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் புத்தாக்க தொழில் முனைவோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கினார்கள். இந்த ஸ்மார்டு கார்டு மூலம் தொழில் முனைவோர்கள் அவர்கள் தொழிலுக்கு தேவையான மென்பொருட்கள், தள்ளுபடி விலையில் தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிகழ்வில், பல்வேறு தொழில்துறை மற்றும் Startup முன்னோடிகள் இணைந்து மல்டி-செக்டர் தொழில்முனைவு வளர்ச்சி, தொழில்முனைவோருக்கு வழிகாட்டினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.சரவண கணேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர்( StartupTN) திரு.சக்திவேல், சோனி பயர் ஒர்க்ஸ் முனைவர் விக்னேஷ் , முன்னணி தொழில்முனைவோர்கள், காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் , கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



