போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு

போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு
X
போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல். -
அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் கைபேசி எண்ணை வாகனப் பதிவுச் சான்றுடன் இணைப்பது போக்குவரத்துத் துறையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனவே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விபரத்துடன் தங்களது கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தினை போக்குவரத்துத்துறை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும், தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள கைபேசி எண்ணை தங்களது பெயரில் உள்ள வாகனங்களுடன் இணைக்கவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி, வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் நகலுடன் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை கொடுத்து வாகன எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story