ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கட்சியினர் கொண்டாட்டம்.

X
ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா. கட்சியினர் கொண்டாட்டம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா ஆண்டிப்பட்டியில் திமுக சார்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆண்டிபட்டி தேனி சாலையில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் திமுகவினர் மதுரை சாலையில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தை அடைந்தனர்.அங்குள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து கடமை .கண்ணியம் கட்டுப்பாடு , 2026 இல் திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் , சமூக நீதியை நிலைநாட்டுவோம் , பாசிச சக்திகளை தமிழ்நாட்டில் பரவிடாமல் ஒழிப்போம் ,தமிழகத்தில் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம், தமிழ்நாட்டின் நலன்களை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றனர். இதையடுத்து கூடியிருந்த பொது மக்களுக்கும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மற்றும் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பூஞ்சோலை சரவணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ் ,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அய்யணன்,பேரூர் கவுன்சிலர் சரவணன் ,நிர்வாகிகள் அர்ஜுன் ,கார்த்தி, சதீஷ், ஜெயபால் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

