திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது *

திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா பொது  கூட்டம் நடைபெற்றது *
X
திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது *
விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆந்திராவில் மருந்து கம்பெனி ஆரம்பித்துள்ளார் அந்த கம்பெனி மாத்திரைகளை விற்பதற்காகவே இங்கு முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது - திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேச்சு விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.G.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருக்கும்போது விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கினார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சைக்கிள்கள் வழங்கினார். தற்போது பெண்கள் படிக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா தான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவமனைகளைத் திறந்தார். ஆனால் தற்போது விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆந்திராவில் மாத்திரை கம்பெனி ஆரம்பித்துள்ளார். அந்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காகவே முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட மருந்துகள் மட்டும்தான் கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் கை காட்டும் நபருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தற்போது திமுக ஆட்சி மோசமான ஆட்சியாக உள்ளது. திமுக என்றால் திருட்டு முட்டாள்கள் கழகம் என விமர்சித்து பேசினார். இந்த அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, M.S.R.ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், மாவட்ட கழக அம்மா துணைச் செயலாளர் சேதுராமானுஜம், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், பிறஅணிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌
Next Story