முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற கன் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம்*

X
அருப்புக்கோட்டையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற கன் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக மற்றும் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமை விருதுநகர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் துவக்கி வைத்தார். இந்த கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர். இங்கு கண் பரிசோதனை செய்த பொது மக்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. முன்னதாக நகர திமுக சார்பில் அருப்புக்கோட்டை பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிஎஸ்ஐ இமானுவேல் முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

