டாஸ்மாக் கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது

X
நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது செயின் பறிப்பு,கஞ்சா விற்கும் கும்பலுக்கு திருட்டு பைக் குறைந்த விலைக்கு விற்ப்பனை செய்தது விசாரணையில் அம்பலம் சென்னை அடுதனத பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் டாஸ்மாக் கடைகள் முன்பு நிறுத்திவிட்டு சென்ற இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக நசரத்பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன . இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்ற கரி(26), என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலை மறைவாக இருந்த செல்வத்தை தனிப்படை போலீசார் குன்றத்தூர் அருகே நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் : பூந்தமல்லி, நகரத்பேட்டை, போரூர்,மதுரவாயல்,வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் டாஸ்மாக் கடைகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக உள்ள பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்லும் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மாடல் மொபெட்டுகளை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். மேலும் கஞ்சா மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. திருடப்பட்ட வாகனங்களின் நிறங்கள் மற்றும் பதிவு எண்களை மாற்றி பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story

