குளித்தலையில் நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ
கரூர் மாவட்டம் குளித்தலை நகர பகுதிகளில் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மாணிக்கம் வழங்கினார். குளித்தலை சுங்ககேட், பெரியபாலம் பகுதிகளில் கழக கொடியினை ஏற்றி வைத்த அவர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து குளித்தலை எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம், தமிழ்நாட்டின் உரிமைகளை எக்காரணத்திற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம், தமிழ்நாட்டுக்காக போராடுவதே ஒரே இலக்கு எனவும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஹெட்ஸ் தொண்டு நிறுவனத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச துணிகள் மற்றும் காலை உணவினையும், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 72 கழக மூத்த முன்னோடிகளுக்கு இலவச வேஷ்டி சட்டைகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து குளித்தலை பெரியபாலம் மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச காக்கி உடையினையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து குளித்தலை கடம்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு அறுசுவை உணவினையும் வழங்கினார். இந்நிகழ்வில் குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா, திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தமிழரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர அவை தலைவர் சாகுல் ஹமீது, குளித்தலை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்
Next Story