ஜெயங்கொண்டத்தில் தொழில்முனைவோருக்கான பயிற்சி நிறைவு

X
அரியலூர், மார்ச் 1- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு மாநில திட்டக் குழு , தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்கக் நிறுவனம் சார்பில் மூன்று நாள்களாக நடைபெற்று வந்த தொழில் முனைவோருக்கான, இணைய வழி வர்த்தகம் பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் பயிற்சியை தொடக்கி வைத்தார். பயிற்றுநர்கள் சரவணன், அருண்குமார், அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழி மூலமாக எவ்வாறு வர்த்தகம் செய்வது, அதன் மூலம் ஏற்படும் பயன்கள், தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள், வங்கிக் கடனுதவிகள், மானியங்கள், இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தனர். பயிற்சி நிறைவில் கலந்து கொண்ட தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் சுரேஷ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் . இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியின் மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் செய்திருந்தார்.
Next Story

