ஜெயங்கொண்டம் எம் எல் ஏ தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து முப்பெரும் விழாவிற்கு அழைப்பு

X
அரியலூர்,,மார்ச் 1- ஜெயங்கொண்டம் எம் எல் ஏ தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு சிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து தா.பமூர் க.சொ.க. திடலில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுத்தார். சென்னையில் பெரியார் திடலில்,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து,மார்ச் 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் க.சொ.க திடலில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட செயலாளருமாகிய சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பிக்கவும் அழைப்பும் விடுத்துள்ளார்.
Next Story

