ஆரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பல்வேறு இடங்களில் திமுகவி்னர் அன்னதானம்

ஆரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா,  பல்வேறு இடங்களில் திமுகவி்னர் அன்னதானம்
X
ஆரணி அடுத்த பத்தியாவரம் அமலராகினி பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு பார்வயற்ற மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினார் மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி.
ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாடினர். ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணிரவி தலைமையில் கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் திமுக கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன்பின் ஆரணி அரசு பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி அன்னதானம் வழங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகி காசி தலைமை தாங்கினார். ஆரணி அடுத்த பத்தியாவரம் அமலராக்கனி பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டு பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளைகணேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், நிர்வாகிகள் கஜேந்திரன், பையூர் ராஜேஷ், ஆரணி சிவா, தச்சூர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story