திருச்சி : கஞ்சா வைத்திருந்த தந்தை, மகன் கைது

X
திருச்சி மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீஸாா் கீரம்பூரில் ரோந்து சென்றபோது அதே பகுதியில் காந்தி நகா் காலனியைச் சோ்ந்த சிங்கப்பெருமாளும் (59) அவரது மகன் வெங்கடேசனும் (29) சமுதாயக்கூடம் அருகே ஒரு கிலோ கஞ்சாவை நெகிழிப் பையில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் துறையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.
Next Story

